2025 நவம்பர் 19, புதன்கிழமை

விழிப்புணர்வு கால்பந்தாட்ட போட்டி

Princiya Dixci   / 2015 மே 06 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

வேல்ட்விஷன் கொட்டக்கலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் விழிப்புணர்வு கால்பந்தாட்ட போட்டி, நுவரெலியா பிரதேசசபை மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (09) பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.  

'பட்டினியையும் வறுமையையும் முற்றாக ஒழித்து ஒன்றுமில்லை எனும் பூச்சியமட்டத்தை அடைவதற்கு உதவுவோம்' எனும் தொனிப்பொருளில் இக்கால்பந்தாட்ட போட்டி இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் கல்கிசை புனித தோமஸ் கல்லூரியை கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயமும் கொழும்பு சன்ரைஸ் விளையாட்டுக் கழகத்தை லொக்கில் உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் எதிர்த்தாடவுள்ளன.  

முற்றுமுழுதாக சர்வதேச விதிமுறைகளுக்கமைய இடம்பெறவுள்ள இக்கால்பந்தாட்ட போட்டியில் அனைவரும் பங்குபற்றி பட்டினி வாழ்வை ஒழிப்பதற்கு கைகோர்க்குமாறு மேற்படி நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X