2025 நவம்பர் 19, புதன்கிழமை

யங் மேரிஸ் அணி சன்ரைஸ் கிண்ணத்தை சுவீகரித்தது

Princiya Dixci   / 2015 மே 06 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

நோர்வூட் சன்ரைஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 'சன்ரைஸ் வெற்றிக்கிண்ணம்' கால்பந்தாட்ட போட்டியில் நாவலபிட்டி யங் மேரிஸ் அணி, சன்ரைஸ் வெற்றிக் கேடயத்தை தனதாக்கிக்கொண்டது.

கடந்த 02ஆம் திகதி ஆரம்பமாகிய சன்ரைஸ் வெற்றிக்கேடயத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 43 அணிகள் பங்குபற்றியிருந்தன.

நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாவலபிட்டி யங் மேரிஸ் அணியும் யட்டியன் தோட்டை யூத் கழகமும் மோதிக்கொண்டன.  

இதில் நாவலபிட்டி யங் மேரிஸ் அணி 3:0 என்ற கோல் கணக்கில் சன்ரைஸ் வெற்றிக் கேடயத்தை தனதாக்கிக்கொண்டதுடன் 30,000 ரூபாய் பணப்பரிசையும் பெற்றுக்கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X