2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வருடாந்த விளையாட்டு போட்டி

Administrator   / 2015 மே 09 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு போட்டியில்; ஆண்கள் பிரிவில் சிவானந்தா தேசிய பாடசாலையும் பெண்கள் பிரிவில் கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயமும் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டன.

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 18ஆவது விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டியும் பரிசளிப்பு விழாவும் வெள்ளிக்கிழமை(08), சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாகவும் மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.எம்.நிசாம், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, சமூக சேவையாளர்கள் இருவர் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றிபெற்றவர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .