Kogilavani / 2015 மே 10 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்அறூஸ்
அஸ்-ஸம்ஸ் விளையாட்டுக்கழகத்துக்கும் கல்முனை யங்பேர்ஸ் விளையாட்டுக்கழகத்துக்கும் இடையில் கல்முனை சந்தாங்கோணி மைதானத்தில் இடம்பெற்ற சிநேகபூர்வ கடினபந்து கிரிகெட் போட்டியில் அஸ் ஸம்ஸ் விளையாட்டுக்கழகம் 54 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
முதலில் துடுப்படுத்தாடிய அஸ்ஸம்ஸ் அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை பெற்றனர்.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய யங்பேர்ஸ் அணியினர் 90 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தனர். போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக எம்.தில்ஸான் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை அபிவிருத்தி போரவையின் தலைவரும் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தருமான ஏ.பி.எம்.அஸ்கர், கல்முனைக்குடி கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தேசமானிய ஏ.பி.ஜவ்பர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அஸ்ஸம்ஸ் அணியினர் இந்த வெற்றியோடு தொடர்ச்சியாக 4 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


48 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
8 hours ago