2025 நவம்பர் 19, புதன்கிழமை

அரைமரதன் போட்டிகளில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பாடசாலைகள் ஆதிக்கம்

George   / 2015 மே 12 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட அரைமரதன் ஓட்டப்போட்டியில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியை சேர்ந்த பி.மாதுளன் மற்றும் பெண்கள் பிரிவில் பெண்களில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி பி.டன்சியா ஆகியோர் முதலிடத்தை பெற்றுக்கொண்டனர்.

இதில் பி.மாதுளன், ஓட்ட தூரத்தை 1 மணி 12 நிமிடங்களிலும், பெண்களில் பி.டன்சியா ஓட்டத்தூரத்தை 1 மணி 28 நிமிடம் 5 செக்கன்களிலும் ஓடி முடித்தனர்.

புதுக்குடியிருப்பில் இருந்து ஆரம்பமான இந்த அரைமரதன் ஓட்டம் முல்லைத்தீவு வரை இடம்பெற்றது.  

ஆண்களுக்கான அரைமரதன் போட்டியில் இரண்டாமிடத்தை துணுக்காய், கோட்டை கட்டிய குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் பி.ஜனந்தன் பெற்றுக்கொண்டதுடன் மூன்றாமிடத்துக்கு முல்லைத்தீவு மகா வித்தியாலய மாணவன் எஸ்.அபிசன் தெரிவானார்.

பெண்களுக்கான அரைமரதனில் இரண்டாமிடத்தை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவியான எஸ்.டிலக்சனா பெற்றுக்கொள்ள மூன்றாமிடத்தை முல்லை, துணுக்காய் கச்சிலைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி எஸ்.விதுசா தனதாக்கினார்.

மேலும், ஆண்கள் பிரிவில் எஸ்.நிர்மல் (கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்), எஸ்.றேனுஜன் (கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்), ஏ.இராஜகுமார் (கிளிநொச்சி புன்னைநீராவி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), ஆர்.அனுஜன் (கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயம்), எஸ்.அலெக்ஸ் (துணுக்காய் கோட்டை கட்டியகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), எல்.பவளன் (கிளிநொச்சி தருமபுரம் மகா வித்தியாலயம்), எஸ்.நெவின்சன் (மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம்) ஆகியோர் முதல் பத்து இடங்களைப் பிடித்தனர்.

அத்துடன், பெண்கள் பிரிவில், எஸ்.தமிழினி (கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், டி.மேகலபிரியா (முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி), வை.நிதர்சனா (முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), வி.பிரதனர் (கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்), ஆர்.சிவரஞ்சினி (யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரி), எஸ்.சுந்தரமதி (முல்லைத்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை), பி.கஜானா (முல்லைத்தீவு பாரதி வித்தியாலயம்) ஆகியோர் முதல் பத்து இடங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X