George / 2015 மே 12 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு அவையின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட, அழைக்கப்பட்ட மேசைப்பந்தாட்ட கழக அணிகளுக்கிடையில் நடத்திய ஆண், பெண் இருபாலாருக்குமான மேசைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்கல்வி அலகில் நடைபெறவுள்ளது.
உடற்கல்வி அலகு பணிப்பாளர் க.கணேசநாதன் தலைமையில் நடைபெறும் இந்த மேசைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில், பெண்கள் பிரிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியை எதிர்த்து யூனியன் கல்லூரி அணியும் ஆண்கள் பிரிவில் யாழ். இந்து கல்லூரி அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணியும் மோதவுள்ளன.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ். இந்துக் கல்லூரியின் ஆசிரியரும் யாழ். பல்கலைக்கழக முன்னால் மேசைப்பந்தாட்ட அணியின் தலைவருமாகிய பி.விமலநாதன் கலந்துகொள்கின்றார்.
47 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
8 hours ago