2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பிரதேச மட்ட விளையாட்டில் களுதாவளை முதலிடம்

Princiya Dixci   / 2015 மே 13 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக விளையாட்டு விழாவில் களுதாவளை முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக விளையாட்டு விழா, களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12)  மாலை நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மட்ட விளையாட்டு விழாவில் முதலிடத்தை களுதாவளை கெனடி விளையாட்டு கழகமும் இரண்டாம் இடத்தை செட்டியாளையம் நியூட்டன் விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொண்டன.

களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகம், ஆண்கள் அணி 71 புள்ளிகளையும் பெண்கள் அணி 67 புள்ளிகளையும் பெற்று மொத்தமாக 138 புள்ளிகளையும் செட்டிபாளையம் நியூட்டன் விளையாட்டுக்கழகம் பெண்கள் அணி 74 புள்ளிகள் ஆண்கள் அணி 51 புள்ளிகள் பெற்று  மொத்தமாக 125 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .