Thipaan / 2015 மே 13 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.எம்.அறூஸ்
'திதுலன - கல்முனை' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் 7 மில்லியன் ரூபாய் நிதியில் சாய்ந்தமருது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி வேலைகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன.
சாய்ந்தமருது கரைவாகு வொலிவேரியன் பிரதேசத்தில் 10 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தினால் சேதமாக்கப்பட்ட வைத்தியசாலையும் பாடசாலையும் சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்திருந்த தாமரை மைதானத்துக்குள் நிர்மாணிக்கப்பட்டதனால் இம்மைதானம் இல்லாமல் ஆக்கப்பட்டது.
இதனால் கடந்த 11 வருட காலமாக சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களும் கழகங்களும் மைதானமின்றி கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.
இதனை அடுத்து சாய்ந்தமருது விளையாட்டுக் கழகங்கள், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிரிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று இம் மைதான அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருவதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
இம்மைதான அபிவிருத்தி வேலைகளை சாய்ந்தமருது விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் நேரடியாக செய்துவருவதுடன் இவ்வேலைகள் இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் நிறைவடையும் நிலையிலுள்ளது.
இம்மைதானம் மிக விரைவில் கழகங்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


49 minute ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
8 hours ago