2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Princiya Dixci   / 2015 மே 13 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பு யங் மேன் விளையாட்டுக் கழகம் நடத்திய மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது.

அம்பாறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுமார் 32 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிய இக்கிரிக்கெட் சுற்றுப்போட்டி பள்ளிக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் ஆரம்பமானது.

இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற போதே பாலமுனை சுப்பர் ஓக்கிட் கழகம் சம்பியனாகியது.

இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று ஹார்ட் என்ட் சொப்ட் கழகத்தை எதிர்த்தாடிய சுப்பர் ஓக்கிட் அணி முதலில் களத்தடுப்பை மேற்கொண்டது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட 5 ஓவர்கள் முடிவில் ஹார்ட் என்ட் சொப்ட் அணியை சுப்பர் ஓக்கிட் அணி தனது துள்ளியமான பந்து வீச்சினால் 35 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தியது.
 
36 வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய சுப்பர் ஓக்கிட் அணி 4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டை இழந்து இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சம்பியாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் வெற்றிக் கிண்ணமும் 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் பெற்றுக்கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .