2025 நவம்பர் 19, புதன்கிழமை

தங்க பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

Kogilavani   / 2015 மே 15 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

கட்டார் தோஹா விளையாட்டரங்களில் நடைபெற்ற முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற அம்பகமுவை பிரேதசத்தை சேர்ந்த யாமனி துலாஞ்சலிக்கு  கினிகத்தேனை பகுதியில் வரவேற்பளிக்கப்பட்டது.

பகுதி பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் யாமனி துலாஞ்சலியை வரவேற்றனர்.

கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தின் அதிபர் திலக் நவநந்தன உட்பட பாடசாலை பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வரவேற்பு பேரணியானது, ஹட்டன் கொழும்பு பிரதான வீதி, கினிகத்தேனை கலுகொலை பகுதியில் ஆரம்பித்து நாவலப்பிட்டி நகரம், யாமனி துலாஞ்சலி கல்வி கற்கும் அம்பகமுவை பாடசாலை வரை சென்றது.

அங்கு யாமனி துலாஞ்சலிக்கும் இவரை பயிற்சி அளித்த அனுர பண்டார திஸாநாயக்கவுக்கும்   வரவேற்பு இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X