2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சம்மாந்துறை அணி சம்பியன்

Gavitha   / 2015 மே 17 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

விளையாட்டுத்துறை அமைச்சு நடத்தும் அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில், சம்மாந்துறை பிரதேச செயலக அணி சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (16)  இடம்பெற்ற இறுதிப் போட்டியில், சாய்ந்தமருது பிரதேச செயலக அணியை எதிர்கொண்ட சம்மாந்துறை பிரதேச செயலக அணி,  தண்டனை உதை மூலம் 4-3 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது.

பலம் வாய்ந்த இரண்டு அணிகளும் இறுதிவரை எவ்வித கோல்களையும் புகுத்தாத நிலையில், மத்தியஸ்தர் தண்டனை உதை மூலம் வெற்றி தோல்வியினை தீர்மானிக்க வேண்டி ஏற்பட்டது.

சனிக்கிழமை (16) காலை இடம்பெற்ற அரை இறுதிப் போட்டியொன்றில் கல்முனை பிரதேச செயலக அணியை எதிர்கொண்ட சம்மாந்துறை பிரதேச செயலக அணி, தண்டனை உதை மூலம் 4 - 2 என்ற கோல் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

மற்றுமொரு போட்டியில் காரைதீவு பிரதேச செயலக அணியை எதிர்கொண்ட சாய்ந்தமருது பிரதேச செயலக அணி 2 - 0 என்ற கோல் அடிப்படையில் காரைதீவு பிரதேச செயலக அணியை வெற்றி கொண்டு  இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இப்போட்டிகளுக்கான சகல ஏற்பாடுகளையும் அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி வேலுப்பிள்ளை ஈஸ்வரன் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக விளையாட்டு அதிகாரி எம்.பீ.எம். றஜாய் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .