2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொன் அணிகளின் சமரில் சிவானந்தா பாடசாலை சம்பியன்

Thipaan   / 2015 மே 17 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

'பொன் அணிகளின் சமர்' என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்துக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியில் சிவானந்தா தேசிய பாடசாலை அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்துக்கும் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் இடையே இடம்பெற்ற 22ஆவது பொன் அண்களின் கடின பந்து கிரிக்கெட் சமர் முதலாவது முறையாக வர்ண சீருடையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் சிவானந்த வித்தியாலய அதிபர் கே. மனோராஜ் தலைமையில் நேற்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்  ஆரம்பமானது.

இந்நிகழ்வில், ஸ்ரீமத் சுவாமி சதுர்புஜானந்தா கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ் தண்டாயுதபாணி. கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி கே.ரி. சுந்தரேசன், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் என். விஜேந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் முதலில் துடுப்பெடுத்தாடியது.  

50 ஓவர் கொண்ட இப்போட்டியில்  சிவானந்தா வித்தியாலயம் 50 ஓவர் முடிவில்  சகலவிக்கட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களைபெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி சகல விக்கட்டுக்களையும் இழந்து 49.3ஓவர் முடிவில் 174 ஓட்டங்களைபெற்றுக்கொண்டது.

இன்று இடம்பெற்று 22வதுபொன் அண்களின் கடினபந்து கிரிக்கெட் சமரில் 56 ஓட்டங்களால் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் வெற்றிபெற்று 2015 ஆம் ஆண்டுக்கான கடினபந்து கிரிக்கெட் சமரின் வெற்றிகிண்ணத்தை சுவீகரித்து சம்பியனானது.

இது வரை நடைபெற்ற 22 போட்டிகளில் 12 தடவைகள் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினரும், 10 தடவைகள் சிவானந்தா வித்தியாலயமும் வெற்றி பெற்றுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .