Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 17 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நியூ ஸ்டார்ஸ் மற்றும் புத்தளம் ட்ரிபல் செவன் அணிகளுக்கிடையே நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணி 03 : 01 கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று 03 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.
புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தி வரும் புள்ளிகள் அடிப்படையிலான கால்பந்தாட்ட தொடருக்கான இவ் ஆட்டம், வெள்ளிக்கிழமை (15) மாலை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இடைவேளைக்கு முன்னதாக நியூ ஸ்டார்ஸ் அணி 02 கோல்களை போட்டது. இடைவேளைக்கு பின்னர் நியூ ஸ்டார்ஸ் அணி மற்றுமொரு கோலை பெற்ற அதேவேளை, ட்ரிபல் செவன் அணியும் ஒரு கோலினை பெற்றுக்கொண்டது.
நியூ ஸ்டார்ஸ் அணிக்காக எம்.தஸ்னீம் இரு கோல்களையும் எம்.அஹ்சாப் ஒரு கோலினையும் பெற்றுக்கொடுத்தனர்.
போட்டிக்கு நடுவர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், எம்.ஒ. ஜாகீர், எச்.ஆர். ஹம்ருசைன் ஆகியோர் கடமையாற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago