Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 17 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகம் 2015ஆம் ஆண்டுக்கான தவிசாளர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
தவிசாளர் வெற்றிக்கிண்ணம், அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் 8ஆவது ஆண்டின் நிறைவினையொட்டி 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து சுற்றுப் போட்டியாக சனிக்கிழமை (16) நடைபெற்றது.
அக்கரைப்பற்று அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஏ.எம்.எம். சஹீட் (ஜே.பி) தலைமையில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது.
48 கழகங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகமும், அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகமும் தெரிவாகின.
இதில் நாணயசுழற்சியில் வெற்றி கொண்ட பைனா விளையாட்டுக்கழகம் முதலில் களத்தடுப்பிற்கு இணக்கம் தெரிவித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய றஹிமியா விளையாட்டுக் கழகம் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் 49 ஓட்டங்களை பெற்று எதிரணியின் வெற்றிக்கு நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகம் 5 ஓவர்கள் முடிவில் 39 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதற்கமைய அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகம் 10 ஓட்டங்களால் 2015ஆம் ஆண்டிற்கான தவிசாளர் வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
இதில் வெற்றி பெற்ற றஹிமியா விளையாட்டுக்கழகத்துக்கு 20,000 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கேடையமும் இரண்டாம் இடத்ததை பெற்றுக்கொண்ட அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக்கழகத்துக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் வெற்றிக்கேடையமும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அதாஉல்லா அஹமட் சக்கி, அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் எம்.ஏ.றாசீக், அக்கரைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். சலாஹூதீன், அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம். அஜ்வத் உட்பட முக்கியஸ்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக அக்கரைப்பற்று றஹிமியா விளையாட்டுக்கழகத்தின் கே.ஆர். சஜாத், தொடர் ஆட்ட நாயகனாக பென்சின் அணியின் றெளப், சிறந்த பந்து வீச்சாளராக றஹிமியா அணியின் டீ. ஹஸ்லி அஹமட், சிறந்த துடுப்பாட்ட வீரராக றஹிமியா அணியின் றஜா ஆகியோர் தெரிவாகினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
8 hours ago