Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மே 20 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விiயாட்டுப்போட்டியின் கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை பிரதேச அணி வெற்றிபெற்று சம்பியனாகத் தெரிவாகியுள்ளது.
மாவட்டமட்ட சுற்றுப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு மற்றும் கல்முனை ஆகிய பிரதேச அணிகள் தெரிவுசெய்யப்பட்டன.
முதலாவது அரையிறுதி ஆட்டத்தின் போது, சம்மாந்துறை மற்றும் கல்முனை பிரதேச அணிகள் ஆகியன மோதிக்கொண்டன. இதன்போது, சம்மாந்துறை பிரதேச அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் போது சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேச அணிகள் ஆகியன மோதிக்கொண்டன. இதன்போது சாய்ந்தமருது பிரதேச அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.
அதனைத்தொடர்ந்து செவ்வாயக்கிழமை (19) நடைபெற்ற இறுதியாட்டத்தில் சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் எதுவித கோல்களையும் போடாது போட்டி முடிவடைந்தது. பின்னர் நேரடியாக தண்டனை உதை வழங்கப்பட்டது. இதில், சம்மாந்துறை பிரதேச அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதன்மூலம் மாவட்டமட்ட கால்பந்தாட்டப் போட்டியில் பல வருட காலமாக வெற்றிபெற்று சாதனை படைத்து வந்த கல்முனை பிரதேச அணியை, இம்முறை சம்மாந்துறை பிரதேச அணி வெற்றிபெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பிரதேச விளையாட்டு உத்தியோகஸ்தர் எஸ்.எல் தாஜூத்தீன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
45 minute ago
52 minute ago