2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரிதம் அணியினர் சம்பியன்

Thipaan   / 2015 மே 23 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

சுவாமி விபுலானந்தா பிறிமியர் லீக்- 2015 வெற்றிக் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 63 ஓட்டங்களைப் பெற்று ரிதம் அணியினர் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நெறிகள் நிலையத்தினால் 3ஆம் வருட மாணவர்களிடையே இப்போட்டி நடாத்தப்பட்டது.

அணிக்கு 8 பேர் கொண்ட 5 ஓவர்களைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியில் நிறுவகத்திலுள்ள 6 அணிகள் பங்கு பற்றிய சுற்றுப்போட்டி கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்றது.

இதில் எலிவேசன் அணியினர் 33 ஓட்டங்களைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நெறிகள் நிலையத்தின் பதில் பணிப்பாளர் கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ், முன்னாள் பணிப்பாளர் கலாநிதி எம். பிரேம்குமார், உதவிப் பதிவாளர் ரி. விஜயகுமார், கிழக்கப் பல்கலைக்கழக விளையாட்டு ஆலோசனை சபையின் தவிசாளர் எம். ரவி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிக் கின்னங்களை வழங்கி வைத்தனர்.

கடந்த வருடம் -2014இல் சுவாமி விபுலானந்தா பிறிமியர் லீக் - 2015 கிரிகெட் சுற்றுப் போட்டி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .