Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 24 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜ.ஏ.ஸிறாஜ்,எம்.எஸ்.எம். ஹனீபா, பைஷல் இஸ்மாயில்
அமானா தகாபுல் நிறுவனத்தினரால் அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் காப்புறுதி நிறுவனங்களை ஒன்றினைத்து நடத்தப்பட்ட அணிக்கு 06 பேர் கொண்ட 04 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிகெட் சுற்றுப் போட்டியில் எல்.ஓ.எல்.சி அணி வெற்றிபெற்றுள்ளது.
நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (23) நடைபெற்றது.
கிரிகெட் சுற்றுப் போட்டி தொடரின் ஆரம்ப நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார்.
இப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு கல்முனை கொமேர்சியியல் கிரடிட் அணியும் அம்பாறை எல்.ஓ.எல்.சி அணியும் தெரிவிவாகின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அம்பாறை எல்.ஓ.எல்.சி அணி முதலில் துடுப்பெடுத்தாடி 04 ஓவர்கள் நிறைவில் 02 விக் கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை கொமேர்சியியல் கிரடிட் அணி 04 பந்து வீச்சு ஓவர் முடிவில் 03 விக்கட் இழப்புக்கு 59 ஓட்டங்களைப் பெற்று 14 ஓட்டங்களால் தோல்வியை தளுவினர்.
வெற்றி பெற்ற அம்பாறை எல்.ஓ.எல்.சி அணிக்கு 7,500 ரூபாவும், வெற்றிக் போப்பையும், கல்முனை கொமேர்சியியல் கிரடிட் அணியினருக்கு 5,000 ரூபாவும் வெற்றிக்கோப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு அமானா தகாபுல் நிறுவனத்தின் தேசிய முகாமையாளர் உமர் முஸ்தபா, விற்பனை பிரிவு முகாமையாளர் சாகுல் ஹமீட் பாறூக், பிராந்திய முகாமையாளர் ஜௌபர் சாதிக் உட்பட அமானா தகாபுல் நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025