Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Sudharshini / 2015 மே 24 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நா.நவரத்தினராசா
வடமாகாண கல்வி விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட எறிபந்து போட்டியில், ஆண்களில் தெல்லிப்பளை யூனியன்; கல்லூரி அணியும் பெண்களில் வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயமும் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டன.
இந்த எறிபந்துச் சுற்றுப்போட்டி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் சனிக்கிழமை (23) நடைபெற்றது.
ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை அணியும் மோதின. இதில் முதல் இரண்டு நேர் செற்களையும் 25:09, 25:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றிய யூனியன் கல்லூரி அணி சம்பியனாகியது. மூன்றாமிடத்தை வவுனியா மாதர் பனிக்கர் மகிழங்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயம் பெற்றுக்கொண்டது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியும் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயமும் மோதின. இதில் சரஸ்வதி வித்தியாலயம் முதல் இரு நேர் செற்களையும் 25:20, 25:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றிச் சம்பியனாகியது. மூன்றாமிடத்தை நெல்லியடி மத்திய கல்லூரி அணி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago