Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 மே 26 , பி.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணா
'இந்துக்களின் மாபெரும் போர்' என வர்ணிக்கப்படும யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் , பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 6ஆவது கிரிக்கெட் போட்டி, எதிர்வரும் 29ஆம் 30ஆம் திகதிகளில் பம்பலப்பிட்டி கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மூன்று தசாப்த கால வரலாற்றைக் கொண்ட யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அணிக்குமிடையிலான 'இந்துக்களின் போர்' கிரிக்கெட் போட்டியானது பின்னர் ஏற்பட்ட சூழ்நிலைகள் காரணமாக நடைபெறவில்லை.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த வருடம் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில மீண்டும் இந்துக்களின் போர் ஆரம்பமாகியதை தொடர்ந்து 6ஆவது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியானது பம்பலப்பிட்டி கோல்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1982ஆம் ஆண்டு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்துக்களின் மாபெரும் போர், கொழும்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இரண்டாவது போட்டி 1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
நடந்து முடிந்த 5 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியும் ஒரு போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியும் வெற்றிபெற்றுள்ளதுடன் இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
கடந்த வருடம் நடைபெற்ற 5ஆவது இந்துக்களின் போர் கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வெற்றிபெற்றிருந்ததுடன் இம்முறை வெற்றிபெறும் அணி தொடர்பில் பாரிய எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago