Kogilavani / 2015 மே 27 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு இடையேயான தடகள விளையாட்டுப்போட்டிகள் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது.
இப்போட்டியில் முதலாம் இடத்தை இணுவில் கலையொளி விளையாட்டுக் கழகமும் இரண்டாம் இடத்தை மல்லாகம் கோட்டைக்காடு ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகமும் மூன்றாம் இடத்தை இணுவில் இந்து விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன.
இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பாலச்சந்திரன் கஜதீபன் மற்றும் வலகாமம் தெற்கு பிரதேச சபைத் தலைவர் தியாகராசா பிரகாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago