2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மூதூர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி

George   / 2015 மே 28 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மூதூர் சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டுக்குரிய மூதூர் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் ஆறாம் நாள் நிகழ்வு நேற்று புதன்கிழமை(27) மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் சங்கத்தின் தலைவர் ஜனாப் சகாப்தீன் இர்பான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மிகவும் சுவாரஸ்யமான முறையில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் மூதூர் பஃறியா மற்றும் இக்பால் அணிகள் மோதின. இதன் போது அதிதிகளுக்கு வீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றதுடன் தலைவரினால் அமைச்சருக்கு நினைவுபரிசும் வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .