Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2015 மே 28 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
வடமாகாண கல்வி விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டியின் கபடிப் போட்டியில் 19 வயது பெண்கள் பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரியும், ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியும் சம்பியன் ஆகின.
கபடிப் போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (26) முதல் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரியும், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையும் மோதின. போட்டி நேரத்தில் இரு அணிகளும் மாறி மாறிப் புள்ளிகள் பெற்றமையால் இறுதி நிமிடங்கள் வரை பரபரப்பாக இருந்தது. இறுதி நேரத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி வெளிப்படுத்திய அபார திறமையால் அவ்வணி 19:17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணி, வவுனியா பரக்கும்பா மகா வித்தியாலய அணியை வீழ்த்தி வெற்றிகொண்டது.
ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணியும் சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் மோதின.
முதற்பாதியாட்டத்தில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்தி 10:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியாட்டமும் கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் வசமிருக்க அவ்வணி 09 : 05 என்ற புள்ளிகள் பெற்றது.
கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 19:09 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
மூன்றாமிடத்துக்கான போட்டியில் வவுனியா பரக்கும்பா மகா வித்தியாலய அணி, வடமராட்சி கலட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையை தோற்கடித்து வெற்றிபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
52 minute ago
3 hours ago
5 hours ago