George / 2015 மே 29 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
வடமாகாண கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு விழாவின் 15 வயதுப்பிரிவினருக்கான கபடிப் போட்டியில் பெண்களில் பண்டத்தரிப்பு ஜெசிந்தா றோமன் கத்தோலிக்க பாடசாலையும் ஆண்களில் மன்னார் கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் சம்பியன் ஆகின.
கபடிப் போட்டிகள், கடந்த 26ஆம் திகதி முதல் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வந்தன.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையும் பண்டத்தரிப்பு ஜெசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் மோதின.
போட்டியின் முழுநேரமும் ஜெசிந்தா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை அணியின் ஆதிக்கம் மைதானத்தில் நிலைபெற அவ்வணி, 30:07 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி வவுனியா பரக்கும்பா மகா வித்தியாலய அணியை வெற்றிகொண்டது.
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் ஒமந்தை மத்திய கல்லூரியும் மன்னார் கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் மோதிக்கொண்டன.
இதில் கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை 25:10 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றது.
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் கிளிநொச்சி சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா பரக்கும்பா மகா வித்தியாலயத்தை வெற்றிகொண்டது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago