2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடமேல் மாகாண கால்பந்தாட்ட அணி இறுதி போட்டிக்கு தகுதி

Kogilavani   / 2015 மே 29 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட கால்ப்பந்தாட்ட அணியினர் வடமேல் மாகாண கால்ப்பந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டிக்கான தகுதியை பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களிடையே கல்வி அமைச்சின் அனுசரணையோடு குருநாகல் மாலிகா பிட்டி மாநகரசபை விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (28) காலை நடைபெற்ற கால்ப்பந்தாட்ட போட்டியிலேயே புத்தளம் சாஹிரா அணி இறுதிப்போட்டிக்கான தகுதியை பெற்றுள்ளது.

மேற்படி தொடரில் கடந்த வருடம் 17 வயதுக்குட்பட்ட கால்ப்பந்தாட்ட போட்டியில் சாம்பியனான ஜோசப் வாஸ் அணியை புத்தளம் சாஹிரா அணி எதிர்த்தாடியது.

போட்டி முடிவடையும்போது இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறாத நிலையில் நடைபெற்ற தண்ட உதையில், புத்தளம் சாஹிரா அணி 3 கோல்களினால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இறுதிப்போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி அணி சியம்பலா கஸ்கொடுவ மதீனா தேசிய பாடசாலை அணியை எதிர்த்தாட உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .