Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 மே 30 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நியூ ஸ்டார்ஸ் மற்றும் யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
புத்தளம் கால்பந்தாட்ட லீக் நீண்ட காலமாக நடாத்தி வரும் கால்பந்தாட்ட தொடர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இந்த ஆட்டமானது புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (29) மாலைஇடம்பெற்றது.
இந்த ஆட்டத்தில் கலந்து கொண்ட இரு அணிகளுக்குமே, தமது அணியின் சம்பியன் கனவை நனவாக்க துடிக்கும் போட்டியாகவே இப் போட்டி அமைந்திருந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே 03 புள்ளிகளை பெற்றுக்கொண்டு மேலும் முன்னேறக்கூடிய நிலை இருந்தது.
எனினும் இரு அணிகளினதும் துரதிஷ்டம் போட்டி சமநிலையில் நிறைவடைந்ததால் இரு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளிகளையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
நியூ ஸ்டார்ஸ் அணிக்காக எம்.ஹக்கீமும், யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணிக்காக ஏ.எம். இர்ஷாதும் கோல்களை பெற்றனர்.
போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். ஜிப்ரி, எச்.எச். ஹம்ருசைன், எம்.என்.எம். நிஸ்ரின் ஆகியோர் கடமையாற்றினர்.
இந்த போட்டி முடிவுகளின் பிரகாரம் நியூ ஸ்டார்ஸ் அணி மொத்தமாக 13 புள்ளிகளோடு இத்தொடரில் தனக்கான சகல போட்டிகளையும் நிறைவு செய்து கொண்டு தொடரிலிருந்து விடை பெற்றுள்ளது.
யாழ். முஸ்லிம் யுனைட்டட் அணியானது இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 10 புள்ளிகளுடன் காணப்படுகிறது.
தொடரில் சம்பியனாகும் அணி எது என்பதை அடுத்த ஒரு போட்டி நிறைவடைந்ததும் தெரிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025