2025 ஜூலை 05, சனிக்கிழமை

கால்பந்தாட்ட போட்டித்தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு

Thipaan   / 2015 மே 30 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன்  அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட  சங்கத்தினால் நடாத்தப்படும் மர்ஹூம் எம்.ஐ.எம். அப்துல் சமீம்  ஞபகார்த்த கிண்ண கால்;பந்தாட்ட போட்டித்தொடரின்  அங்குரார்ப்பண  நிகழ்வும் ஆரம்ப போட்டியும் கல்முனை மாநகர ஐக்கிய மைதானத்தில் நேற்று (29) இடம்பெற்றன.

இவ் ஆரம்பபோட்டியில் ஏறாவூர் யங்  ஸ்டார் விளையாட்டுக்கழக அணியினருக்கும் மட்டக்களப்பு  பாடுமீன் விளையாட்டுக்கழக அணியினருக்கும் இடையில் இடம்பெற்றது. 

இதில்  5க்கு 2 கோல்கள் வித்தியாசத்தில்  ஏறாவூர் யங்  ஸ்டார் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.

இந்  நிகழ்வுகள்,  அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட  சங்கத்தினதும் சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தினதும்  பொது செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப்பின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

இதில், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முஹம்மட்  ஹனி, கல்முனை  பொலிஸ்  பொறுப்பதிகாரி  எ.டப்ளியூ. எ. கபார், வீதி அபிவிருத்தி அதிகார சபை  கல்முனை பிராந்திய பொறியியல்லாளர்  எ. ஜாபீர்  உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள்,  விளையாட்டுக்கழக அமைப்புகளின் பிரதி நிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை  ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 12 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றும் இக் கால்பந்தாட்ட போட்டித்தொடரின்  இறுதிப்  போட்டி எதிர் வரும் ஜூன் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .