Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மே 31 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
வடக்கின் நீலங்களின் சமர் - 2015 கிரிக்கெட் போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி ,10 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
'நீலங்களின் சமர்' எனப்படும் கிளிநொச்சி இந்துக் கல்லூரிக்கும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்துக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி, 29ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதற்கிணங்கக் களமிறங்கிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி 39.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு முதலாவது இனிங்ஸூக்காக துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 44.2 ஓவர்களில் 118 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது.
43 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இனிங்ஸூக்காக களமிறங்கிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி 21.2 ஓவர்களில் 45 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது.
3 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 2 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது.
சிறந்த பந்துவீச்சாளர் விருது இரண்டு இனிங்ஸிலும் 7 விக்கெட்களைக் கைப்பற்றிய கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் எஸ்.பிரதீபன் பெற்றுக்கொண்டார், 30 ஓட்டங்களைப் பெற்ற கிளிநொச்சி இந்து வீரன் எ.அனுக்ஷன் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் 3 பிடிகளை பிடித்த கிளிநொச்சி இந்துக் கலலூரி வீரன் கே.கஜானன் சிறந்த களத்தடுப்பாளராகவும் 30 ஓட்டங்கள், 5 விக்கெட்களைக் கைப்பற்றிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி வீரன் ஏ.அனுக்ஷன் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
வெற்றிபெற்ற அணி மற்றும் வீரர்களுக்கான கேடயங்கள் மற்றும் பரிசில்களை கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர் எஸ்.சத்தியசீலன் வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago