2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிளிநொச்சி இந்து பழைய மாணவர் அணி வெற்றி

Princiya Dixci   / 2015 ஜூன் 01 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் அணிகளுக்கிடையிலான ரி -20 கிரிக்கெட் போட்டியில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி அணி 32 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இரு கல்லூரிகளின் 19 வயதுப்பிரிவு கிரிக்கெட் அணியினர் மோதிய வடக்கின் நீலங்களின் போர் கிரிக்கெட் போட்டி முடிவடைந்த நிலையில் பழைய மாணவர்களுக்கிடையிலான போட்டி, கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி இந்துக் கல்லூரி பழைய மாணவர் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. இதில், யோ.நிரோஜன் 47, எஸ்.யூட்வின்சன் 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி, 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக 40 ஓட்டங்கள் மற்றும் 5 விக்கெட்களை வீழ்த்திய கிளிநொச்சி இந்துக் கல்லூரி பழைய மாணவன் எஸ்.யூட்வின்சன் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டு பாடசாலை ஆசிரியர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற அணிக்கு 15 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட துடுப்பாட்ட போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. முதலில் ஆடிய கிளிநொச்சி இந்து ஆசிரியர் அணி 14.5 ஓவர்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 55 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் அணி 9.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .