2025 ஜூலை 05, சனிக்கிழமை

வடமாகாண விளையாட்டுப்போட்டியில் வடமராட்சி முன்னிலை

George   / 2015 ஜூன் 01 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

வடமாகாண கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாண  பாடசாலை அணிகள், மற்றும் வீரர்களுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டு விழாவில் வடமராட்சி கல்வி வலயம்  113 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதாக மாகாண கல்வித் திணைக்கள பிரதிக் கல்விப்பணிப்பாளர் க.சத்தியபாலன், ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்தார்.

வடமாகாண விளையாட்டுப்போட்டி, 5 கட்டங்களாக நடைபெறும் நிலையில் தற்போது முதல் மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ளன. மூன்றாம் கட்டப் போட்டிகள் நாளை 2ஆம் திகதி வவுனியாவில் ஆரம்பமாகவுள்ளன.

நடைபெற்று முடிந்த 2 கட்டப் போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் வடமராட்சி முதலிடத்தில் உள்ளது. 104 புள்ளிகள் பெற்ற வலிகாமம் வலயம் இரண்டாமிடத்திலும் 85 புள்ளிகள் பெற்ற யாழ்ப்பாண வலயம் மூன்றாமிடத்திலும் 62 புள்ளிகள் பெற்ற கிளிநொச்சி வலயம் நான்காவது இடத்திலும் 37 புள்ளிகள் பெற்ற வவுனியா தெற்கு வலயம் 5ஆவது இடத்திலும் உள்ளன. தீவக வலயம் இன்னமும் புள்ளிகள் எதனையும் பெறாத நிலையில் இறுதி 12ஆவது இடத்தில் உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .