Thipaan / 2015 ஜூன் 02 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கால்பந்தாட்ட லீக் கடந்த ஒரு வருட காலமாக புத்தளத்தில் தொடராக நடாத்தி வந்த புள்ளிகள் அடிப்படையிலான கால்பந்தாட்ட தொடரில் புத்தளம் நகரின் மிகப்பலம் வாய்ந்த அணியான புத்தளம் கடற்கரை வீதி லிவர்பூல் கால்பந்தாட்ட கழகம் மீண்டும் சம்பியனாகியுள்ளது.
இறுதிக்கட்ட கால்பந்தாட்ட புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (30) மாலை லிவர்பூல் அணிக்கும் கல்பிட்டி பேர்ல்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்றது.
இப் போட்டியில் 03 : 01 கோல்களினால் லிவர்பூல் அணி வெற்றிபெற்றதன் மூலம் லிவர்பூல் அணி இத்தொடரில் இயல்பாகவே சம்பியனாக மகுடம் சூடியது.
12 புள்ளிகளை ஏற்கெனவே பெற்றிருந்த லிவர்பூல் அணியானது தனக்கான இறுதியான இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே சம்பியனாக முடியும் என்ற இக்கட்டான ஒரு சூழ்நிலையில் களமிறங்கியது.
எனினும் கல்பிட்டி பேர்ல்ஸ் அணியோ 07 புள்ளிகளுடன் இப்போட்டியில் களம் இறங்கினாலும் அதன் வெற்றி தோல்வி பெரிதாக தாக்கம் எதனையும் ஏற்படுத்தாத நிலையே இருந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற லிவர்பூல் அணியானது மொத்தமாக 15 புள்ளிகளை பெற்றுள்ளது.
இந்த கால்ப்பந்தாட்ட போட்டி தொடரில் இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சி இருக்கின்ற நிலையில் அந்த போட்டிகளின் வெற்றி தோல்வி பிரகாரம் இதர அணிகள் பெற்றுக்கொள்ளும் புள்ளிகள் லிவர்பூல் அணி பெற்றுள்ள 15 புள்ளிகளை எட்டிப்பிடிக்க முடியாத நிலையிலேயே லிவர்பூலானது தொடர் நிறைவடைவதற்கு முன்பாகவே சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.
லிவர்பூல் மற்றும் கல்பிட்டி பேர்ல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் லிவர்பூல் அணிக்காக எம்.பவ்சான், எம்.ரஸ்வான், எம்.ஐ.எம். அலி ஆகியோர் கோல்களை அடித்தனர்.
போட்டிக்கு நடுவர்களாக எம்.ஏ.எம். பஸ்ரின், எம்.எஸ்.எம். ஜிப்ரி, ஏ.எச். உமர் பாச்சா ஆகியோரும் துணை நடுவர்களாக எம்.எஸ்.எம். ரபீக், எஸ்.ஆர்.எம். ஆஷாத் ஆகியோரும் கடமையாற்றினர்.
லிவர்பூல் அணியின் பயிற்சியாளர் எச்.எச். நஸார், முகாமையாளர் எம்.ஓ. ஜாகீர் உள்ளிட்ட நிர்வாகிகளின் வழிகாட்டலில் லிவர்பூல் அணி மீண்டும் ஒரு சம்பியனாக மகுடம் சூடியமை இங்கு குறிப்பிடத்தக்கது.


2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago