2025 ஜூலை 05, சனிக்கிழமை

மெட்ரிக்ஸ் அணி சம்பியன்

Princiya Dixci   / 2015 ஜூன் 02 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் ஆர்.கே.எஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஹிஜ்றா அணியை எதிர்த்தாடிய மெட்ரிக்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனாகியது.

நேற்று திங்கட்கிழமை (01) நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெட்ரிக்ஸ் அணியினர் ஐந்து ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஹிஜ்றா அணியினர், ஐந்த ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இதனால் மேலதிக 18 ஓட்டங்களினால் மெட்ரிக்ஸ் அணி வெற்றி பெற்றதுடன் கிண்ணத்தையும் சுவிகரித்துக் கொண்டது.

இப்போட்டியின் சிறந்த வீரராக மெட்ரிக்ஸ் அணியின் எம்.பௌசான்,  தொடரின் சிறப்பாட்டக்காரராக ஹிஜ்றா அணியின் சப்றின், சிறந்த பந்து வீச்சாளராக அதே அணியின் முசாகும் தெரிவாகினர்.

இப்போட்டி நிகழ்வுகளுக்கு  முன்னாள் அக்கரைப்பற்று  மாநகர சபை உறுப்பினர் அஸ்மி ஏகபூருர், சட்டத்தரணி வைத்தியர் எம்.சமீம், இளைஞர் சேவைகள் உத்தியோகஸ்தர் இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .