George / 2015 ஜூன் 02 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமான ஆசிய பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப் (செஸ்) போட்டி-2015இல் 11 வயது பிரிவுக்கட்பட்ட பிரிவில் கண்டி, புனித திருத்துவ கல்லூரியில் 6ஆம் தரத்தில் பயிலும் மாணவனான கிருபாகர் ஹரிகிஷன், பங்குபற்றுகின்றார்.
இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகள் பலவற்றிலும் நடைபெற்ற சதுரங்கப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டங்களையும் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் தம்வசப்படுத்திய இவர், போலந்து, இந்தியா, ரஷ்யா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச ரீதியிலான சதுங்கப் போட்டிகளில் பங்கேற்று தனது திறமைகளை வெளிபடுத்தியுள்ளார்.
இரண்டரை வயது முதல் சதுரங்கத்தில் தன்னுடைய திறமையை காண்பித்துவரும் ஹரிகிஷன், கடந்த ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தி, கல்லூரிக்கு பெருமை சேர்த்ததோடு, 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கராத்தே போட்டியில் முதன்முறையாக பங்கேற்று சாம்பியன் பட்டத்தை சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
கண்டியை பிறப்பிடமாக கொண்ட இவர், உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியின் பழைய மாணவன் குணரத்னம் கிருபாகரன் மற்றும் திகனை மாபேரிதென்ன வித்தியாலயத்தின் ஆசிரியரான காஞ்சனா தம்பியதியரின் மகனாவார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago