Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
George / 2015 ஜூன் 02 , பி.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
அண்மைக்காலமாக விளையாட்டுத்துறையில் வடமாகாணத்தின் ஆதிக்கம் வலுப்பெற்று வருவதுடன், குழு அல்லது அணியாக விளையாடும் விளையாட்டுக்களில் வடமாகாணத்தின் ஆதிக்கம் சற்று அதிகமாகவுள்ளதை அவதானிக்கமுடிகின்றது.
கிரிக்கெட்டில் பாடசாலைகள் தங்கள் தரத்தை முன்னேற்றுவதுடன், இளைஞர் கால்பந்தாட்டப் போட்டியில் வடமாகாண அணிகள் ஆதிக்கம் செலுத்திவரும் அதேவேளை, கூடைப்பந்தாட்டத்திலும் வடமாகாணம் சிறப்பான முன்னேற்றத்தை வெளிக்காட்டுகின்றது.
விளையாட்டில் வட மாகாணத்தின் முன்னேற்றத்துக்கு, வீர, வீராங்கனைகளின் கூட்டு அர்ப்பணிப்பு சிறந்த பலனைத் தந்துள்ளது. இந்நிலையில், தடகளத்திலும் வடமாகாணம் தன்னை நிலைப்படுத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்துவருகின்றது.
வடமாகாண தடகள, மைதான விளையாட்டு வீரர்கள் என்றவுடன், தேசிய ரீதியில் ஞாபகம் வருவது கோலூன்றிப் பாய்தல் போட்டி. தேசிய போட்டிகளில் அசைக்க முடியாத நிலையை வடமாகாண கோலூன்றிப் பாய்தல் வீரர்கள் நிலைநாட்டியுள்ளனர். குறிப்பாக அளவெட்டி அருணோதயா மற்றும் தெல்லிப்பழை மகாஜானக் கல்லூரி வீர, வீராங்கனைகளைக் குறிப்பிடலாம்.
தொடர் பயிற்சிகள், அதில் ஏற்பட்ட சிறப்புத் தேர்ச்சியின் மூலம் அந்தக் கல்லூரிகளின் வீர, வீராங்கனைகள் தொடர்ந்து 5 வருடங்களாக அந்த நிலைகளை தக்க வைத்து வருகின்றார்கள். இந்த நிலைமை மற்றைய தடகள, மைதான நிகழ்வுகளிலும் ஏற்பட்டு வடமாகாண வீரர்கள் தேசிய ரீதியில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.
தட்டெறிதலில் புத்தூர் கல்லூரி ஒருமுறை தடம் பதித்தது. அதேபோல் ஓட்ட நிகழ்வுகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென்.பற்றிக்ஸ் கல்லூரி மற்றும் சென்.ஜோன்ஸ் கல்லூரி வீரர்கள் தடம்பதித்துள்ளனர். உயரம் பாய்தலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த டி.செந்தூரன் என்ற வீரர், அவுஸ்திரேலியா வரையில் சென்று கனிஷ்ட உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றி வந்துள்ளார்.
உடற்பயிற்சி கண்காட்சியில் மானிப்பாய் மகளிர், இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, ஊர்காவற்றுறை சென்.அன்டனிஸ் போன்ற கல்லூரிகள் தங்கள் ஆதிக்கங்களை தேசிய ரீதியில் காட்டியுள்ளன.
இதனைவிட மற்றைய தடகள, மைதான நிகழ்வுகளில் இடங்கள் கிடைப்பது அரிதாகவுள்ளது. 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 6ஆம் இடமாகவிருந்த வடமாகாணம், 2014ஆம் ஆண்டு 5ஆவது இடத்துக்கு முன்னேறியது.
இந்த முன்னேற்றம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் தடகள, மைதான விளையாட்டுக்களின் கிடைக்கும் இடங்களை விரிவுபடுத்த வேண்டும். பல விளையாட்டுக்களில் வடமாகாண வீரர்கள் தங்கள் தடங்களை பதிக்க வேண்டும். இதற்கு கடுமையான பயிற்சி, ஒரு விளையாட்டின் மீதான அக்கறையும் அதிகமாக வேண்டும்.
தற்போது 2015ஆம் ஆண்டுக்கான வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. முதலாம், இரண்டாம் கட்டங்கள் முல்லைத்தீவிலும், மூன்றாம் கட்டம் வவுனியாவிலும், நான்காம் கட்டம் யாழ்ப்பாணத்திலும் நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் வீர, வீராங்கனைகள் மற்றும் அணிகள் தேசிய பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் பங்குபற்றவுள்ளனர். இதற்காக வீர, வீராங்கனைகள் தங்களை வளப்படுத்தி வடமாகாணத்தின் நிலையை முன்னுக்குக் கொண்டுவரவேண்டிய அவசியமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
3 hours ago
5 hours ago