2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கரப்பந்தாட்ட போட்டியில் தெல்லிப்பழை அணி வெற்றி

Princiya Dixci   / 2015 ஜூன் 03 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

யாழ். மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையிலான இரண்டு போட்டிகளிலும்  தெல்லிப்பழை பிரதேச செயலக அணி வெற்றி பெற்றது. 

யாழ். மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி ஆர். மோகனதாஸ் தலைமையில் கோப்பாய் கிறுஸ்தவ  கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (30) இப்போட்டி நடைபெற்றது. 

இறுதிச் சுற்றில் விளையாடிய கோப்பாய் பிரதேச செயலக ஆண்கள் அணியுடன் மோதிய தெல்லிப்பழை பிரதேச செயலக ஆண்கள் அணி 03 க்கு 02 என்ற அடிப்படையில் தெல்லிப்பழை வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.

கரவெட்டி பிரதேச செயலக பெண்கள் அணியும் தெல்லிப்பழை பிரதேச செயலக பெண்கள் அணியும் மோதியதில் 02 க்கு 0 அடிப்படையில் தெல்லிப்பழை அணி முதலாம் இடத்தை தனதாக்கிக்கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .