Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 03 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எல்.லாபீர்
யாழ்.பிரதேச செயலகத்தின் விளையாட்டுப் போட்டி, பிரதேச செயலாளர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (02) மாலை நடைபெற்றது.
திருக்குடும்ப கன்னியர் மட மாணவிகளின் உடற்பயிற்சி கண்காட்சி இதன்போது நடைபெற்றது. தொடர்ந்து நாவாந்துறை சென்.மேரிஷ் அணிக்கும் குருநகர் பாடும்மீன் அணிக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. இதில் சென்.மேரிஷ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனாகியது.
யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பிரதேச செயலக கழகங்களுக்கிடையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கினார்.
யாழ்.கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சண்முககுமார், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன், யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஆர்.மோகனதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாவட்டச் செயலர் தனது உரையில், விளையாட்;டின் போது வெற்றிதோல்வி என்பது சகஜமானது. தோல்வியடைந்தவர்கள் பொறுமையுடன் வெற்றியாளர்களுடன் சிநேகிதமான முறையில் நடந்துகொள்வது சிறப்பானது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago