2025 ஜூலை 05, சனிக்கிழமை

த்ரீ ஸ்டார்ஸ் அணி அடுத்த போட்டிக்கு தகுதி

Kogilavani   / 2015 ஜூன் 04 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குள், பதிவு செய்யப்பட்டுள்ள கால்;பந்தாட்ட கழகங்களுக்கிடையிலான புதிய கால்பந்தாட்ட தொடரின் முதலாவது போட்டியில் த்ரீ ஸ்டார்ஸ் அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்து அடுத்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த புதிய கால்பந்தாட்ட தொடரின் முதலாவது ஆட்டம் புதன்கிழமை (03) மாலை புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

80 நிமிடங்களை கொண்ட நொக்அவுட் முறையிலான இந்த புதிய கால்ப்பந்தாட்ட தொடரில் புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ள லிவர்பூல், விம்பிள்டன், த்ரீ ஸ்டார்ஸ், போல்டன், ட்ரிபல் செவன், நியூ ஸ்டார்ஸ், நியூ பிரண்ட்ஸ் மற்றும் சஹீரியன்ஸ் ஆகிய எட்டு அணிகள் களமிரங்கியுள்ளன.

முதலாவது போட்டியில் த்ரீ ஸ்டார்ஸ் அணியோடு மற்றுமொரு பலம் வாய்ந்த அணியான புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணி எதிர்த்தாடியது.

நொக்அவுட் முறையிலான ஆட்டம் என்ற படியால் முதலாவது போட்டியே மிகவும் சூடு பிடித்திருந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் த்ரீ ஸ்டார்ஸ் அணி 2:1 கோல்களினால் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளதொடு நியூ ஸ்டார்ஸ் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம்.ஜிப்ரி, ஏ.ஓ.அஸாம், எம்.ஓ.ஜாகீர் ஆகியோர் கடமையாற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .