2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி வெற்றி

Princiya Dixci   / 2015 ஜூன் 04 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஹொக்கி அணிக்கும் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கும் இடையில் நடைபெற்ற சிநேகபூர்வ ஹொக்கிப் போட்டியில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (02) இப்போட்டி நடைபெற்றது.

முதற்பாதியாட்டத்தில் தனித்திறன் கொண்டு ஆடிய பண்டத்தரிப்பு அணி எதிரணியின் கோல் கம்பங்களை அடிக்கடி ஆக்கிரமித்தது. அதன் பயனாக அவ்வணி ஒரு கோலைப் பெற்றது. இரண்டாவது பாதியாட்டத்தில் பல்கலைக்கழகத்தின் ஆட்டம் மைதானத்தில் நிலைபெற்றபோதும், கோல்கள் அடிக்கும் சந்தர்ப்பம் இரு அணிகளுக்கும் கிடைக்கவில்லை.

இறுதியில் பண்டத்தரிப்பு அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .