2025 ஜூலை 05, சனிக்கிழமை

புத்தளம் விம்பிள்டன் அணி வெற்றி

Princiya Dixci   / 2015 ஜூன் 05 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது போட்டியில் புத்தளம் நகரின் மற்றுமொரு பலம் வாய்ந்த அணியான விம்பிள்டன் அணி வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்குள் பிரவேசித்துள்ளது.

இந்த போட்டியானது புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (04) மாலை இடம்பெற்றது.

பலம் வாய்ந்த விம்பிள்டன் அணியோடு, புத்தளம் சஹீரியன்ஸ் அணி எதிர்த்தாடியது. சஹீரியன்ஸ் அணியானது புத்தளம் நகரின் பல்வேறு கழகங்களில் விளையாடும் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. விம்பிள்டனுக்கு எதிரான இந்த போட்டியிலும் கூட சஹீரியன்ஸ் அணியில் விம்பிள்டன் அணி வீரர்கள் பலரும் விம்பிள்டனுக்கு எதிராக இங்கு விளையாடியது சுவாரஸ்மான அமைந்தது. 

போட்டி ஆரம்பித்ததிலிருந்து இரு அணிகளுமே கோல் போட எத்தனித்தும் கோல் போட முடியாமல் போட்டி சமநிலையில் நிறைவடைந்ததால் பிரதம நடுவர் வெற்றி தோல்வியை தீர்மானிக்க தண்ட உதை வழங்கினார்.

முதல் ஐந்து தண்ட உதைகளில் இரு அணிகளும் தலா 03 கோல்களை பெற்றன. அடுத்து மேலதிகமாக வழக்கப்பட்ட மற்றுமொரு தண்ட உதையை விம்பிள்டன் அணி கோலாக்கியதால் விம்பிள்டன் அணி 04 : 03 கோல்களினால் வெற்றி பெற்றது.

போட்டியின் நடுவர்களாக எம்.என்.எம். நிஸ்ரின், எச்.எச். ஹம்ருசைன், ஏ.ஓ. அசாம் ஆகியோர் கடமையாற்றினர். விம்பிள்டன் அணியானது அரை இறுதி போட்டியில் புத்தளம் ட்ரிபல் செவன் மற்றும் நியூ பிரண்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியோடு எதிர்த்தாடவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .