2025 ஜூலை 05, சனிக்கிழமை

வலைப்பந்தாட்டத்தில் வலிகாம பாடசாலைகள் ஆதிக்கம்

Princiya Dixci   / 2015 ஜூன் 07 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வடமாகாணப் பாடசாலைகளின் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கிடையில் நடத்தப்பட்டு வரும் வலைப்பந்தாட்டப் போட்டியில் 15, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகள் சம்பியனாகின.

வடமாகாண விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் முடிவடைந்த நிலையில் 3ஆம் கட்டப் போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள், ஓமந்தை மத்திய கல்லூரியில் 4, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெற்றன.

15 வயதுப்பிரிவு வலைப்பந்தாட்டத்தில் வலிகாமம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி முதலிடத்தையும் வலிகாமம் அராலி சரஸ்வதி வித்தியாலயம் இரண்டாமிடத்தையும் வவுனியா வடக்கு சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் வலிகாமம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி நான்காமிடத்தையும் பெற்றன.

17 வயதுப்பிரிவில் வலிகாமம் சுழிபுரம் விக்டோரியக் கல்லூரி அணி முதலிடத்தையும் வடமராட்சி மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை இரண்டாமிடத்தையும் வலிகாமம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மூன்றாமிடத்தையும் கிளிநொச்சி மகா வித்தியாலய அணி நான்காமிடத்தையும் பெற்றன.

19 வயதுப் பிரிவில் வலிகாமம் அராலி சரஸ்வதி வித்தியாலயம் முதலிடத்தையும் வலிகாமம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அணி இரண்டாமிடத்தையும் வலிகாமம் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணி மூன்றாமிடத்தையும் மடு தூய ஜோசப்வாஸ் மகா வித்தியாலயம் நான்காமிடத்தையும் பெற்றுக்கொண்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .