2025 ஜூலை 05, சனிக்கிழமை

புத்தளம் சாஹிரா கால்பந்தாட்ட அணியினருக்கு கௌரவிப்பு

Thipaan   / 2015 ஜூன் 09 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

பதினேழு வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட தொடரில் வட மேல் மாகாண சம்பியனாகவும்  பதினைந்து வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட தொடரில் வட மேல் மாகாணத்தில் மூன்றாம் இடத்தினையும் பெற்று சாதனை நிலை நாட்டிய புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி கால்பந்தாட்ட அணியினர், திங்கட்கிழமை (08) காலை சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலைகள் கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட போட்டிகளிலேயே இவர்கள் சாதனை படைத்திருந்தனர்.

பாடசாலைக்கும் புத்தளம் நகருக்கும் பெருமையை பெற்றுத்தந்த அவ் அணிகளின்  விளையாட்டு வீரர்களே இதன்  போது சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கல்லூரி மைதானத்தில் அதிபர் எஸ்.ஏ.சி. யாக்கூப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எஸ்.எஸ். ரஜிய்யா, உதவி அதிபர் எஸ்.ஆர்.எம்.ஆசாத், உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம்.{ஹமாயூன் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கி வெற்றி வீரர்களை கௌரவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .