2025 ஜூலை 05, சனிக்கிழமை

மென்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன்

Princiya Dixci   / 2015 ஜூன் 09 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

சாளம்பைக்கேணி 12ஆம் கொளனி பிறன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 07ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட சினேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நற்பிட்டிமுனை மென்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியனாகியது. 

பிறன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஆர். நிஜாம் தலைமையில் 5ஆம் கொளனி அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) இப்போட்டி நடைபெற்றது. 
 
அணிக்கு 08 பேர்களைக் கொண்ட 06 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் நற்பிட்டிமுனை மென்ஸ் விளையாட்டுக்கழகமும் சாளம்பைக்கேணி 12ஆம் கொளனி எமரெல்ட் விளையாட்டுக் கழகமும் மோதின.
 
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நற்பிட்டிமுனை மென்ஸ் விளையாட்டுக்கழகம் களத்தடுப்பை தெரிவு செய்து. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய எமரெல்ட் விளையாட்டுக்கழக அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 38 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.
 
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மென்ஸ் விளையாட்டுக்கழக வீரர்கள் மிகவும் அபாரமாக துடுப்பெடுத்தாடி 3.3 ஓவர்களில் 42 ஓட்டங்களைப் பெற்று 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றனர்.
 
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய முகாம், சவளக்கடை மத்திய குழுத்தலைவர் ஏ.சி.நஸார் ஹாஜி, கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.நபார், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்எம்.ஹைதர்அலி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .