2025 ஜூலை 05, சனிக்கிழமை

யாழ். மாவட்ட அணி சம்பியன்

George   / 2015 ஜூன் 10 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண மாவட்டங்களுக்கிடையில் நடத்தப்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ். மாவட்ட அணி சம்பியனாகியது.

கிளிநொச்சி கனகபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப்போட்டியில் யாழ். மாவட்ட அணியும் மன்னார் மாவட்ட அணியும் மோதின.

ஐந்து சுற்றுக்களைக் கொண்ட இந்த இறுதிப்போட்டியில் முதற்சுற்றை மன்னார் மாவட்ட அணி 25:22 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது. இரண்டாது சுற்றில் மீண்டெழுந்த யாழ். மாவட்ட அணி அந்தச் சுற்றை 25:20 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் மூன்றாவது சுற்றை 26:24 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றியது.

மீண்டும் தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய மன்னார் அணி நான்காவது சுற்றை 25:23 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றியது. இதனால் விறுவிறுப்படைந்த ஐந்தாவதும் இறுதிச் சுற்றில் ஆக்கிரோஷமாக ஆடிய யாழ். மாவட்ட அணி 15:11 என்ற புள்ளிகள் அடிப்படையில் தனதாக்கியதுடன் 5 சுற்றுக்களில் 3 சுற்றுக்களை தனதாக்கி யாழ். மாவட்ட அணி சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .