2025 ஜூலை 05, சனிக்கிழமை

2ஆவது தடவையாகவும் சம்பியனாகிய மகாஜன பெண்கள் கால்பந்தாட்ட அணி

Gavitha   / 2015 ஜூன் 10 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

வடமாகாண கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளின் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டியின், 19 வயதுப்பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியனாகியது.

பெண்கள் கால்பந்தாட்டப் போட்டிகள் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில்,  வவுனியா சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மாதகல் சென்.ஜோசப் றோமன் கத்தோலிக்க வித்தியாலயமும் மகாஜனக் கல்லூரியும் மோதின.

முதற் பாதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரி வீராங்கனை என்.சானு தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் தங்களுக்கான கோல் பெறும் வாய்ப்புக்களை இழந்தன.  

இறுதியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

வவுனியா சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற 15 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில், வடமராட்சி கொற்றாவத்தை பாடசாலை சம்பியனாகியது. வலிகாமம் புனித ஹென்றியரசர் கல்லூரி இரண்டாமிடத்தையும் மன்னார் சென்.லூசியா மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தையும் யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி நான்காமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சம்பியனாகியது. மன்னார் புனித சவேரியர் ஆண்கள் பாடசாலை இரண்டாமிடத்தையும் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி மூன்றாமிடத்தையும், மன்னார் சென்.லூசியா மகா வித்தியாலயம் நான்காமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற 19 வயதுப்பிரிவு ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் வலிகாமம் இளவாலை சென்.ஹென்றியரசர் கல்லூரி அணி சம்பியனாகியது. யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி இரண்டாமிடத்தையும் மன்னார் முருங்கன் மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தையும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நான்காமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .