Gavitha / 2015 ஜூன் 10 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்
கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில், 800 மீற்றர் தூர ஓட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவி தேவதாஸ் டென்சிகா மற்றும் 20 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி பளை மத்திய கல்லூரி மாணவி யோகநாதன் சுகிர்தா ஆகியோரை, கிளிநொச்சி மாவட்டச்செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் புதன்கிழமை (10) கௌரவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில், இருவருக்கும் மாவட்டச்செயலகத்தால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் ராஜா ரணசிங்க, மாவட்டச் செயலக உத்தியோகஸ்தர்கள், வீராங்கனைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

5 hours ago
7 hours ago
18 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
18 Nov 2025