Menaka Mookandi / 2015 ஜூன் 10 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் சிங்கர் வெற்றிக்கிண்ணத்துக்காக பாடசாலைகளில் 15 வயது பிரிவு 3 அணிகளுக்கிடையில் நடத்தி வரும் 50 ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி 89 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
மகாஜனக் கல்லூரி மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை (08) நடைபெற்ற போட்டியில் மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோதியது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி என்.சர்மிலன் பெற்ற 105 ஓட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 265 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் என்.சர்மிளன் 105, எஸ்.ரிசாந்த் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். உதிரிகளாக 43 ஓட்டங்கள் பெற்றப்பட்டன. பந்துவீச்சில் நெல்லி மத்திய கல்லூரி சார்பாக ரி.விஜிபன் 3, ஸ்ரீ.கிருஸ்ணா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நெல்லியடி மத்திய அணி 39.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.தர்சிகன் 60, கி.அபிரதன் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். உதிரிகளாக 38 ஓட்டங்கள் பெறப்பட்டன.
பந்துவீச்சில் மகாஜனாக் கல்லூரி அணி சார்பாக ஆர்.றேனுஜன் 3, எஸ்.ரிசாந்த் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago