2026 மார்ச் 07, சனிக்கிழமை

கால்பந்தாட்ட விளையாட்டு கழகங்களின் கலந்துரையாடல்

Princiya Dixci   / 2015 ஜூன் 14 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

இலங்கையின் கால்பந்தாட்டத்துறையை சர்வதேசத்தில் முதல்தரத்துக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் அநுர டி சில்வா, நேற்று சனிக்கிழமை (13) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் அழைப்பினை ஏற்று மட்டக்களப்புக்கு வருகைதந்த அவர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் கே.உதயகுராஜ் தலைமையில் மட்டக்களப்பு கூட்டுறவு நிலையத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கால்பந்தாட்டத்துறை வளர்ச்சி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கை கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக அவர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தினால் இலங்கை கால்பந்தாட்ட சங்கத் தலைவர் கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்க செயலாளர் ரி.காந்தன் உட்பட விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .