2025 ஜூலை 05, சனிக்கிழமை

திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி ஜே.பி.எல்.க்கு தகுதி

Thipaan   / 2015 ஜூன் 14 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் எனப்படும் ஜே.பி.எல் டுவெண்டி 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தகுதிகாண் போட்டியில் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணி வெற்றிபெற்று ஜே.பி.எல் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.

யாழ்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற தகுதிகாண் சுற்றில் சுழிபுரம் விக்டோரியன்ஸ் அணியும் திருநெல்வேலி விளையாட்டுக்கழக அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது. என்.லவகாந் அதிரடியாக ஆடி 120 ஓட்டங்களையும், எஸ்.சுரேந்திரன் 36, என்.சிவராஜ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் விக்ரோறியன்ஸ் அணி சார்பாக என்.ஐங்கரன், எம்.சர்வானந்த ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

246 என்ற பாரிய வெற்றியிலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய விக்ரோறியன்ஸ் அணி, 18.2 ஓவர்களில் 125 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தனர். என்.கணேஷ் 68, எஸ்.பிரணவன் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் திருநெல்வேலி அணி சார்பாக ஆர்.கோகுலன் 3, என்.பிரபு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .