Thipaan / 2015 ஜூன் 16 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்
கல்முனை பிரிமியர் லீக்கின் கடின பந்து டுவெண்டி 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்று, 2015ஆம் ஆண்டுக்கான கல்முனை பிரிமியர் லீக் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை பிரிமியர் லீக்கின் இறுதிப் போட்டி, கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று தோல்வியினை தழுவிக் கொண்டது.
இவ் இறுதிப் போட்டிக்கு அட்டாளைச்சேனை கல்வியல் கல்லூரி ஓய்வு பெற்ற உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இவ் இறுதிப் போட்டியில் சிறப்பாட்டக்காரராக கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஏ.எம்.றிலாஸ் தெரிவு செய்யப்பட்டதுடன் சுற்றுப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ஏ.எல்.எம்.அஹ்னாப் தெரிவு செய்யப்பட்டார்.
இறுதிப் போட்டிக்கு நடுவர்களாக ஏ.டபிள்யு.எம்.ஜெஸ்மின், எம்.ஸி.ஹாறூன் ஆகியோர் கடமையாற்றினார்கள்.


19 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
45 minute ago
2 hours ago