2025 ஜூலை 05, சனிக்கிழமை

பரிசளிப்பு நிகழ்வு

Thipaan   / 2015 ஜூன் 16 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தி முடித்த புள்ளிகள் அடிப்படையிலான கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (13) மாலை இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த தொடரானது புள்ளிகள் அடிப்படையிலான தொடர் என்பதால் இறுதி போட்டி என்ற ஒன்று இல்லாத நிலையில் பரிசளிப்பு விழாவுக்காக வேண்டி கண்காட்சி கால்பந்தாட்ட போட்டி ஒன்றும் அன்றைய தினம் ஏற்பாடாகி இருந்தது.

தொடரில் சாம்பியனாகிய லிவர்பூல் அணிக்கும், லீக் அணிக்குமிடையில் இந்த  கண்காட்சி கால்ப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

லிவர்பூல் அணியானது சம்பியனாகிய ஒரு வார காலத்துக்குள்ளேயே பிறிதொரு கால்பந்தாட்ட தொடரில் போல்டன் அணியிடம் வீழ்ந்து தனது சம்பியன் தகுதியை இழந்திருந்த நிலையில், இந்த கண்காட்சி போட்டியில் லீக் அணியை 02 கோல்களினால் வெற்றி கொண்டதன் மூலம் தனது சம்பியன் திறமையை மீண்டும் மைதானத்தில் நிலைநாட்டியது.

இந்த போட்டியில் நடுவர்களாக எம்.ஆர்.எம். அம்ஜத், ஏ.ஏ.எம். கியாஸ், ஏ.எம். பஸ்ரின் மற்றும் ஏ.எச். உமர் பாட்சா ஆகியோர் கடமையாற்றினர்.

புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்கின் புதிய நிர்வாகம் இந்த பரிசளிப்பு நிகழ்வுதனை மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரதம அதிதியாக புத்தளம் தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளர் எம்.என். எம்  நஸ்மி கலந்து கொண்டார். முன்னாள் கால்ப்பந்தாட்ட வீர்கள் பலர் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மேடையில் வீற்றிந்ததை காணக்கூடியதாக இருந்தது.

புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக சகல அணிகளுக்கும் ரொக்கப்பணமாக தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கி வைக்கப்பட்டது.

சாம்பியனாகிய லிவர்பூல் அணிக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் 30வருட காலத்துக்கு பின்னர் தனது வரலாற்றில் இரண்டாம் இடம்பெற்ற ட்ரிபல் செவன் அணிக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் மூன்றாம் இடம்பெற்ற நியூ ஸ்டார்ஸ் அணிக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு நடுவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .