Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 17 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரின் மிகப்பழைமை வாய்ந்ததும் பிரகாசிக்கத் தவறியதுமான புத்தளம் போல்டன் கால்ப்பந்தாட்ட கழகம் ஒரு தசாப்த காலத்துக்குப் பின்னர் இறுதி போட்டி ஒன்றில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளது.
புத்தளம் பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்டு வரும் நொக் அவுட் முறையிலான கால்பந்தாட்ட தொடரின் இறுதி ஆட்டத்துக்கே இவ் அணி தெரிவாகியுள்ளது.
இத்தொடரின் இரண்டாவது அரை இறுதி ஆட்டம், திங்கட்கிழமை (15) மாலை புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. போல்டன் அணி மற்றும் புத்தளம் நகரின் மற்றுமொரு அணியான த்ரீ ஸ்டார்ஸ் அணி மோதின.
இவ்விரு அணிகளுமே ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்காத அணியாக திகழ்கிறது. அது போலவே போட்டியும் கடுமையாக இருந்தது. இந்த போட்டியை பார்வையிட வருகை தந்திருந்த மூத்த ஆதரவாளர்கள், தாம் சுமார் 40 வருட காலங்களுக்கு முன்பு போட்டியில் பங்கேற்ற போல்டன், த்ரீ ஸ்டார்ஸ் அணிகளின் ஆக்ரோசமான ஆட்டங்களை பார்த்து ரசித்தமையை இந்த போட்டி ஞாபகமூட்டுவதாக தெரிவித்தனர்.
இடைவேளைக்கு முன்பாக யாரும் எதிர்பாராத நிலையில் போல்டன் 03 கோல்களை அதிரடியாக பெற்றது. எனினும், ஒன்றுக்கு மேல் ஒன்று மஞ்சள் அட்டைகள் வீரர்களுக்கு நடுவரால் காண்பிக்கப்பட்டது. போட்டி நடைபெறும்போதே ரசிகர்கள் மைதானத்தில் நுழைந்து குழப்பம் விளைவிக்க முயற்சித்தனர். ஆனால், போட்டி நிறைவடைந்ததும் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்புகள் பொதுமக்களின் சமரசத்தினால் நிறைவுக்கு வந்தது.
இந்நிலையில், த்ரீ ஸ்டார்ஸ் அணியின் வீரர் ஏ.எம். பாக்கீர் மைதானம் நடுவிலிருந்து செலுத்திய ஒன்றன் பின் ஒன்றான இரு உதைகள் இரு கோல்களாக மாறியது. த்ரீ ஸ்டார்ஸ் அணியின் வேகம் மேலும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் போட்டி நிறைவுக்கு வந்ததால் போல்டன் அணி 03 : 02 கோல்களினால் வெற்றி பெற்றது.
போல்டன் அணிக்காக ஏ.ஓ. அசாம், எம். இஸ்ராப், எம். இஹ்சான் ஆகியோர் கோல்களை பெற்றுக்கொடுத்தனர். போட்டிக்கு நடுவர்களாக ஏ.எம். பஸ்ரின், ஏ.எச்.ஹம்ருசைன், எம்.ஐ.எம். அலி ஆகியோர் கடமையாற்றியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
3 hours ago
5 hours ago